Description
(தொகுக்கப்பட்ட முழுப்படைப்புகள்)
-சு. வில்வரத்தினம்
கவிதைகள், இசைப்பாக்கள், நாடகங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், முன்னுரைகள், வில்வரத்தினத்தின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் அடங்கியது. வில்வரத்தினம் கவிதைகளில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு சொல்லும். ஒவ்வொரு ஓசையும். ஒவ்வொரு புள்ளியும் பரந்து விரிந்த உணர்வுலகத்தில் நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது. மனிதர்களின் உணர்வுலகம் என்பது. இன்னொரு அநுபவத்தைத் தன் அநுபவமாக உள்வாங்கிக்கொள்ளும் உலகம்.
ஈழத்து மக்களை வில்வரத் தினம் தமது கவிதைகளில் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். சங்கக் கவிதைகளில் உணர்வுப் பரிமாணமும் மெய்யழகும். வில்வரத்தினம் கவிதைகளில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால ஈழ மக்களின் உணர்வுப் பரிமாணம் மற்றும் மெய்யழகாக வடிவம் பெற்றுள்ளன. சங்கக் கவிதை இயற்கை அழகை. அதன் உணர்வுப் பரிமாணத்தில் பேசினால். வில்வரத்தினம் கவிதை ஈழ மண்ணின் அவலத்தை ஓசைகளாக வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். கவிதை என்ற மெய்யழகு இரண்டிலும் ஒன்றாக இருக்கும் விநோதத்தை நம்மால் உணர முடிகிறது.





Reviews
There are no reviews yet.