Availability: In Stock

வெற்றியாளர்களுக்கான 6 மனப்பாங்குகள்-நார்மன் வின்சென்ட் பீலே

Original price was: £11.00.Current price is: £10.25.

Category:

Description

ஒரு கஷ்டம் நேரும்போது, பயப்படுவதோ, வருத்தப்படுவதோ அல்லது கோபம் கொள்வதோ இயல்பு இவை ஒரு ஒழுங்கிற்கு உட்படாத மனதின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் அப்படிப்பட்ட உணர்ச்சி பூர்வமான சிந்தனையின் விளைவாக செய்யப் படும் செயல்களும் முடிவுகளும் பொதுவாக ஏற்கக் கூடியதாக இல்லாமலும், சில சமயம் அதன் பின்விளைவுகளால் நிலைமையை இன்னும் கடினமாக்குபவையாகவும் உள்ளன.

இதுபோன்ற சவாலான நேரங்களில் ஒரு நேர்மறை மனநிலை கொண்டிருப்பது முடிவுகளை உங்களுக்குச் சாதகமாக மாற்ற உதவும் உங்கள் மனமே உங்களது மிகப்பெரிய சொத்து ஒரு அமைதியான அறிவார்ந்த மனம் சிக்கல்களை தவிர்க்க ஆக்கபூர்வமான தீர்வுகளை உருவாக்கும். ஆகையால், உங்களது மனப்பாங்கே வெற்றிக்கு வழி இந்தப் புத்தகத்தில் வழங்கப் பட்டுள்ள நடைமுறை உதவிக் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் மனப்பாங்கை ஏன் உயர்த்திக் கொள்ளக் கூடாது?

பின் வரும் சவால்களை வெற்றி கொள்ள எந்த மனநிலை உங்களுக்கு உதவும் என்று கண்டறியுங்கள்

அச்சங்களை எதிர்கொள்ள

வாழ்வை உற்சாகப்படுத்திக் கொள்ள

கவலைகளை களைய

ஆளுமையின் குறைபாடுகளை நீக்க

எதிர்காலத்திற்கு தயாராக

பிரச்சினைகளை ஆக்க பூர்வமாக தீர்க்க

டாக்டர் நார்மன் வின்சென்ட் பீலே வெற்றிகரமான மனப்பாங்கிற்கான ரகசியங்களைப் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.