Availability: In Stock

புதுவை இரத்தினதுரை கவிதைகள் 1993-2005

Original price was: £3,000.00.Current price is: £2,700.00.

பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்

Already sold: 0/2
Category:

Description

அன்று வியட்நாம் போர் நிகழ்ந்த போது ஒரு வியட்நாமியனாக பேசிய அவரது கவிதை, பாப்லோ நெரூடா கொல்லப்பட்டபோது சிலிக் குடிமகனாகக் கோபம் கொண்டது. யாழ்ப்பாணத்தில் சாதி ஒழிப்பு போராட்டம் நடைபெற்ற போது, அந்த போராட்ட சக்திகளின் குரலாக அவரது கவிதைகள் ஓங்கி ஒலித்தன. அஞ்சலோட்டம் போன்று அதன் தொடர்ச்சியாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை தனது கவிதைகளின் கருப்பொருள் ஆக்கினார்.

புதுவை இரத்தினதுரை, ஒரு கைதேர்ந்த சிற்பக் கலைஞர். அவர் சமூகத்துடன் அதிக ஊடாட்டம் கொண்டவராக இருந்ததால், தனது கவிதைகளையும் மக்கள் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு ஒரு சிற்பம் போலவே வடித்தெடுத்தார். அவர் ஒரு மக்கள் கவிஞர். அவரது கவிதைகளைப் புரிந்து கொள்ள எவருக்கும் அகராதி தேவைப்படாததால் அவரது கவிதைகள் மக்கள் மனங்களில் ஆழத் தைத்தன. தன் படைப்புகளை எடைபோட காலத்தைத் தவிர வேறு எந்தத் தராசுப் படியும் கிடையாது என்பார் அவர்.

-பொ. ஐங்கரநேசன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “புதுவை இரத்தினதுரை கவிதைகள் 1993-2005”

Your email address will not be published. Required fields are marked *