Description
அனுபவங்களையும் அறிந்த தகவல்களையும் வைத்து எழுதுவது ஒரு வகை. இது எளிதானது. அனுபவங்களை எவ்வளவுதான் சிறப்பாக எழுதினாலும் அவை வெறும் பதிவுகளாகச் சுருங்கி விடக்கூடிய வாய்ப்புகளே அதிகமுண்டு. அனுபவங்களையும் நுண்ணிய அவதானிப்புகளையும் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதும்போது சிறந்த படைப்புகள் உருவாகின்றன. இதற்கொரு கலைப் பயிற்சி வேண்டும். அப்படித்தான் தகவல்களைத் திரட்டி அதையே மையப்படுத்தி எழுதினால் அது தகவற் திரட்டாகி விடக் கூடிய நிலையே அதிகம். இந்த மாதிரி எழுத்துகள் தினம் தினம் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்து குவிகின்ற வேகத்திலேயே அவை மறந்தும் மறைந்தும் போகின்றன. இவற்றிற்கான பெறுமதி அநேகமாக ஊடகச் சேதிகள் அல்லது செவி வழித் தகவல்களுக்கு நிகரானவை. மாறாக அனுபவங்களோடு நுண்ணிய அவதானிப்புகளைச் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதும்போது அது வேறொன்றாக – வித்தியாசமான ஒன்றாக வெளிப்படுத்துகின்றது. இது இன்னொரு வகை. இங்கேதான் எழுத்தாளரின் பார்வையை – தரிசனத்தை – நாம் உணர முடியும். அந்தப் பார்வையில்தான் அவருடைய அரசியலையும் அல்லது அவர் முன்வைக்கும் அரசியலையும் பண்பாட்டுப் புரிதலையும் வரலாற்று நோக்கையும் சமூகத்தைக் காணும் விதத்தையும் புரிந்து கொள்ள முடியும். இதற்கே பெறுமதி அதிகம்.
Reviews
There are no reviews yet.