Description

-பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

‘தமிழ் கற்பித்தல்’ என்னும் இந்நூலில் தமிழ்மொழியின் அமைப்பு, தமிழ்க் கல்வி முறை, கற்பித்தல் முறை, ஆசிரியர் – மாணவர் தொடர்பு, இலக்கியம் – வாசகர் தொடர்பு போன்றவற்றைப் பற்றி ஆழமாக எடுத்துரைக்கிறார். மொழியின் அமைவு பற்றிய விளக்கத்துக்காகவும் மொழிக் கையாளுகைத் திறனை வளர்ப்பதற்காகவும் இலக்கணக் கல்வி இன்றியமையாதது என்று நூலாசிரியர் தெளிவு செய்கிறார்.
உன்னதமாகத் தமிழ்மொழி, தமிழ் இலக்கணம் கற்பிக்கும் வழிமுறைகள், இலக்கியம் சாராப் பாடங்களைப் பயில்வதற்குப் பெற்றிருக்கவேண்டிய அடிப்படை மொழித்தேர்ச்சி, அறிவு நிலை, கவிதை கற்பித்தல், நயத்தல், விமர்சித்தல், தமிழாசிரியர்கள் எதிர்நோக்கும் புலமைப் பிரச்சினைகள், தமிழ்ப் பாடத்துக்கு வேண்டிய அறிவாழம், அதற்கான பாடத்திட்டம் போன்றவை பற்றித் திறம்பட எடுத்துரைக்கிறது இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ் கற்பித்தல்”

Your email address will not be published. Required fields are marked *