Description

இந்தக் கதை ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ என்கிற ரீதியில் நான் முயன்ற முதல் தொடர்கதை இதற்கு முன் இரண்டு, மூன்று சிறுகதைகள் இந்த வகையில் எழுதி இருக்கிறேன். ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சுஜாதாவின் முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் இந்த ‘சொர்க்கத் தீவு’. அய்யங்கார் என்கிற கம்யூட்டர் எஞ்சினியர் சொர்க்கத் தீவு என்கிற ஒரு விசித்திரப் பிரதேசத்துக்குக் கடத்தப்படுகிறான். அந்த சொர்க்கத் தீவைக் கட்டுப்படுத்தும் பிரம்மாண்ட கம்ப்யூட்டரின் கோளாறை நிவர்த்தி செய்வதற்காக அவன் அங்கே தேவைப்படுகிறான். இன்றைய அமைப்புக்கு மாறான ஒரு புதிய அமைப்பு அத்தீவில் நிலவுகிறது. மனிதர்கள் அன்பு, காதல், ரசனை போன்ற பிரதான உணர்ச்சிகள் நீக்கப்பட்டு சிந்தனா சக்தி மழுங்கடிக்கப்பட்டு கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட அடிமைகளாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் விழுப்புணர்வு கொள்ளும் சிலர் புரட்சிக்கு ஆயத்தமாகி தீவின் தலைவன் சத்யாவை எதிர்க்கத் துணைந்து தங்களுக்கு உதவுமாறு அய்யங்காரை அணுகுகிறார்கள். அய்யங்கார் அவர்களுடன் இணைந்தானா? புரட்சி என்னவாகிறது. {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சொர்க்கத்தீவு”

Your email address will not be published. Required fields are marked *