Description

-சி. சிவசேகரம்

சிவசேகரம் நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் சிறுகதை எழுத்தாளர் விமர்சகர், நாடக ஆசிரியர். முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆற்றலுடையவர்.

தமிழின் நவீனத்துவப் பிரச்சினைகள் பற்றி அவர் அதிகம் எழுதியிருக்கிறார். இலங்கையின் இனத்துவ அரசியல் பற்றியும், சர்வதேச அரசியல் பற்றியும் அவர் அதைவிட அதிகம் எழுதியுள்ளார். படைப்பிலக்கியத் துறையில் அவருடைய பங்களிப்பும் முக்கியமானது.

இடதுசாரி மரபில் வலுவாகக் காலூன்றிய முக்கியமான கவிஞர். ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பிலும் அடக்குமுறைக்கு எதிராகவும் தன் கவிதையைப் பயன்படுத்துபவர்,1950 களிலிருந்து தமிழில் இடதுசாரி மரபில் வந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். சிவசேகரம் அவர்களுள் தனித்துவமானவர். அவரது கவிதைப் பாணி அவருக்கே உரிய தனித்துவமானது. தமிழில் மட்டுமன்றி மூன்றாம் உலக நாடுகளின் முற்போக்குக் கவிஞர்கள் மத்தியிலும் அவர் தனித்துத் துலங்கக் கூடியவர். தமிழில் அரசியல் கவிதைகள் பற்றிப் பேசுபவர்கள் சிவசேகரத்தை தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது எனலாம்.

-எம். ஏ. நுஃமான்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிவசேகரம் கவிதைகள் 1973-2020”

Your email address will not be published. Required fields are marked *