Description
ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா.
நம் முன்னோர்கள் மனிதரின் குணாம்சங்கள் விலங்கினங்களுக்கும் இருப்பதாக உருவகித்து காலாதிகாலமாக நமது சிறார்களின் மனதுக்குள் அவற்றை பதியம்வைத்து அதையே உண்மையென நம்பும் வகையில் கதைகளை சிருஷ்டித்துத் தந்திருக்கிறார்கள். குள்ளப்புத்தி நரிக்குள் புகுத்தப்படும். காட்டின் ராஜாவாக சிங்கத்திற்கு முடிசூடியும், பறவைகளில் அசிங்கமானது காகமெறும் பிள்ளைகளை நம்பவிக்கப்படுகின்றனர்.
சிங்கம் அறியுமா காட்டின் தலைவன் என்று? நரி எந்த அடிப்படையில் குள்ள நரியாகியதென்பது அதற்கு தெரியுமா? உண்மையில் காகம் தான் ஆசியாவில் உள்ள பறவையினத்தில் மக்களுடன் ஒன்றிணைந்து நெருங்கி பழகும் பறவை என்பது இன்றைய அறிவியல்.





Reviews
There are no reviews yet.