Description
சார்த்தரின் நூறாண்டு நிறைவின் போது, கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ கிராண்மா’ எழுதியது: மார்க்ஸ் திட்டமிட்ட சோசிலசத்தை, அதன் தூய்மையான வடிவத்தில் சார்த்தர் எடுத்துக் கொண்டார், அந்த சோசிலசம் மே 1968 போராட்டத்தின் தோல்வியாலும் சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை. இந்தத் தனிநபர்களும் அந்தக் கனவுகளும் கடந்த காலத்துக்கல்ல, எதிர்காலத்துக்குரியவை.” மாபெரும் சிந்தனையாளராக, படைப்பிலக்கியவாதியாக, நாடகாசிரியராக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக, காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளராக , 1968 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் ஆதர்சங்களிலொருவராகத் திகழ்ந்த ழான் பால் சார்த்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்நூல். அவற்றை பின்னணியாகக் கொண்டு அவரது தத்துவம், இலக்கியப் படைப்புகள், அரசியல், சமூகச் செயல்பாடுகள் ஆகியன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
Reviews
There are no reviews yet.