Description

உங்க காலத்துல நீங்க பொண்ணு பாத்துக் கட்டுனதோட எல்லாம் போச்சு. இப்ப என்னடான்னா எங்கீமே பொண்ணுங்க இல்ல. எல்லாரும் ஆம்பிளப் பையன்தான் வேணும்னு ஸ்கேன் பண்டி ஸ்கேன் பண்டித் தெரிஞ்சிட்டு பெத்துக்க ஆரம்பிச்சாங்க! கருவுல பொம்பளைப்பிள்ளைன்னு தெரிஞ்சா கலைக்க ஆரம்பிச்சாங்க! கலைச்சிட்டு ஒன்னுந்தெரியாத மாதிரி ஊட்டுல வந்து உக்கோந்துட்டு மாம்பழ ஜூஸும், ஆரஞ்சி ஜூஸும் குடிச்சுக்குவாங்க!

பொண்ணைப் பெத்து வளர்த்துனா அடுத்தவன் வீட்டுக்கு நகை நட்டோட தாட்டியுடனுமேன்ற வெசனம்தான் எல்லாருக்கும் இருந்திருக்குதுங்கண்ணா!. இருக்குறதைப் பூராவும் புள்ளைக்கிப் போட்டு தாட்டியுட்டுட்டா நாளைக்கி ஊடு வெறு ஊடா போயிருமுல்லொ! பறம்பரை கெவுருத்தி என்னாகுறது?

– நாவலிலிருந்து…

Other Specifications

Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback

 

Category: நாவல்