Description
கவிதையும் அரசியலும் என்கிற இந்த இந்த நூலின் தலைப்பே முக்கியமானதான ஒன்றாகப்படுகின்றது. ஈழத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய எனது வாசிப்புகளின்போது முஸ்லிம்களின் அடையாள உருவாக்கம் பற்றிய வாசிப்புகளில் நுஃமான் எழுதிய Sri Lankan Muslims – Ethnic Identity within Cultural Diversity, என்ற நூல் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. முஸ்லிம்கள் தேசிய இனமாக உருப்பெற்ற வரலாற்றினையும், இனமுரண்பாட்டின் வரலாற்றறையும் அந்த நூலில் அவர் ஆய்வுபூர்வமாக முன்வைத்திருப்பார். ஒரு கவிஞராகவும், மொழியியலாளராகவும் அதுவரை நான் அறிந்திருந்த நுஃமானின் அரசியல் பிரக்ஞையை அந்த நூலின் மூலமாக அறிந்துகொண்டேன். தற்போது கவிதையும் அரசியலும் என்கிற இந்த தொகுப்பினை வாசிக்கின்றபோது அவரது நோக்கும் நிலைப்பாடும் அவரது எழுத்துகளிலும் மதிப்பீடுகளிலும் எவ்விதமான தாக்கத்தை உருவாக்கின என்பதை நன்குணர முடிகின்றது. அழகியல், அக உணர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதான போர்வையில் இலக்கியத்தில் அரசியல் நீக்கம் செய்யும் போக்கு வலிதடைந்தும் வெற்றியடைந்தும் வருகின்ற சூழலில் இந்த நூலின் வருகை முக்கியத்துவமானது என்றே கருதுகின்றேன்.
Reviews
There are no reviews yet.