Description
சு.தியடோர் பாஸ்கரன்.
கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம்.





Reviews
There are no reviews yet.