Description
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள் ‘ என்ற பொதுத்தலைப்பில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை.மேட்ச்ஃ பிக்ஸிங் என்றால் என்ன என்று தெரிந்திராத காலத்தில் எழுதப்படட்து என்று இந்த கதை உண்மைக்கு மிக அருகில் வந்து விட்டது. சுஜாதாவிற்கே ஆச்சர்யம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.தூண்டில் கதைகள் என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளை தொடர்ந்து அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை. சுஜாதா இப்போது திரைப்படத்துறையில் கணிப்பொறியின் திறமைகளை முழுவதும் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆலோசகராவும் பணிபுரிகிறார்.தொடர்கதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.