Description
-சி.மோகன்.
ஓர் ஆணும் பெண்ணும் குடும்பம் என்கிற அலகுக்குள் நுழைகிறபோது, தம் விருப்பங்களுக்கும் விடுதலை உணர்விற்கும் இடையூறு ஏற்படும் என்பதை அறிந்தேதான் அவ்வாழ்வைத் தேர்வுசெய்கிறார்கள். ஆனால் அவ்வறிதல் வந்த பிறகு, இருவருக்குமான விடுதலை உணர்வினைக் கொண்ட வாழ்முறையை உருவாக்கிக்கொள்ளும் தகுதியை அவர்கள் பெற்றுவிட்டால், மகிழ்வின் ஒளிகூடிய, புரிதலில் மேன்மை கொண்ட வெளியில் வாழ்வு பரவசிக்கத் தொடங்குமென்கிறாள் கமலி.
அழகிய குறியீடுகள், நீர்மை மிகுந்த மொழி, பாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் துலங்கச் செய்கிற அறிவார்ந்த உரையாடல்கள், மனக் கிளர்வுகளின் கவித்துவமான வெளிப்பாடுகள் என கமலி பேரெழில் கொண்டவள்.





Reviews
There are no reviews yet.