Description
ஒருஇந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் கடந்த ஒரு வருடத்திற்குள் எழுதப்பட்டவை. ”நான் என் மனதை சுத்திகரிப்பதற்கான ஒரு முறைமையாக கவிதை எழுதுதலை, பெருந்தொற்று காலத்தில் வீடடைந்து வேலை செய்யும் லயம் தப்பிய கடந்த இரண்டு வருடங்களில் கண்டுகொண்டேன். நான் பதின்பருவத்திலிருந்தே கவிதை எழுதுபவனாக இருந்தாலும் கவிதையை எனக்குரிய வடிவமாக மீட்டெடுத்ததும் உறுதி செய்துகொண்டதும் சமீபத்தில்தான்.” என்று தனது கவிதையியலை முன்வைக்கிறார் எம்.டி. முத்துக்குமாரசாமி. ”எழுதிப்பார்த்து ஆழ் மனதை அறிதல் என்பதில் ஒரு வகையான அறிவுத்தோற்றவியலின் அதீத கற்பிதம் (epistemological fantasy) இருக்கிறது. என் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை வைத்து நான்தான் என்று பிறர் அறுதியிடுவது போல அல்லது புகைப்படம் எடுத்த பின்னரே, கண்ணாடியின் முன் நின்ற பின்னரே என் முகம் எனக்கு அடையாளம் ஆவது போல எழுதி முடித்த கவிதை என்னை முழுமையாகக் காட்டுமா? இல்லை ஏதேனுமாவது சொல்லுமா? கவித்துவ பிரக்ஞையை கவிதை வெளிப்படுத்துமா? அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு
Reviews
There are no reviews yet.