Description
-மு. சிவலிங்கம்
இலங்கை நாட்டில் , மலையக மக்கள் இரண்டு நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்து முடித்த துயர நினைவுகளை மீட்டி, துக்கம் அனுஷ்டிக்கின்ற கருப்புத் தினமே “மலையகம் 200″ என்ற தொனிப் பொருளாகும். இந்தத் தொனிக் குரல், இலங்கை, இந்தியா அடங்கலாக நாடு கடந்து வியாபித்துக் கொண்டிருக்கின்றது. இதன் தாற்பரியம் ஓர் இனத்தின் தேசிய இருப்பு பற்றி உணரவேண்டிய தருணம் என்று உணர்த்தும் காலமேயாகும். இந்தத் தருணத்தில் இதை உணரும்போது… துயர நினைவுகளும் கசப்புணர்வுகளுமே திரண்டு வருகின்றன!
இந்தத் துயர நினைவுகள் எவை? என்பதை வாசகர் அறிந்து கொண்டால்தான் இந்த “ஒப்பாரி கோச்சி” தொகுப்பிலுள்ள பதினெட்டு கதைகளையும், அங்கே நடமாடும் கதை மாந்தர்கள் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இக்கதைகள் யாவும் பொழுதைப் போக்குவதற்காக எழுதப்பட்டவையல்ல… அதனால் அவை புனைவு ஆக்கங்களும் அல்ல..!





Reviews
There are no reviews yet.