Description
-ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி,
-ஏ.ஜி.எத்திராஜ்லு (தமிழில்)
அமெரிக்கா கண்டத்தின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அவர்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தது அன்றைய பிரிட்டிஷ் அரசு என்ற வரலாற்று உண்மை நாமறிந்ததே. பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுக்கீஸ் போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களுக்கான பங்கை அமெரிக்கா கண்டத்தில் எடுத்துக்கொள்ளத் தவறவில்லை. ஐரோப்பியர்கள் அவரவர் சக்திக்கும், தேவைக்கும், வாய்ப்புக்கும் தகுந்த அளவுக்கு அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். செவ்விந்தியர்களைக் கண்டத்தின் மேற்கு நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக விரட்டிவிட்டு அமெரிக்கா முழுவதும் குடியேறினர்.
செவ்விந்தியர்களிடமிருந்து பறித்த வளமிகு நிலப்பரப்பில் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவந்த கறுப்பின மக்களின் உழைப்பைக் கொண்டு வளர்ந்த நாடே இன்று உலகின் வல்லரசாகத் திகழும் அமெரிக்க ஐக்கியக் குடியரசு. ஆப்பிரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான கறுப்பின மக்களை விலங்குகளைப் பிடிப்பதுபோல் பிடித்து அமெரிக்கச் சந்தையில் அடிமைகளாக விற்றனர். பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய வியாபாரம் அடிமை வியாபாரமே. இரு நூறாண்டுகளுக்கும் மேலாக கறுப்பின மக்கள் அமெரிக்கா கண்டத்தில் பட்ட துயரம் சொல்லித் தீராதது. கறுப்பின மக்கள் இன்றும் நிறம் மற்றும் இன ரீதியான பாகுபாட்டிற்கு ஆளாவதை அன்றாடம் காண்கிறோம். இதன் வலியையும் உண்மையையும் சொல்வதே இந்த நாவலாகும்





Reviews
There are no reviews yet.