Description

தடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால் உயிர் மயக்கும் உத்தரவாதம். ‘என் பழைய பனை ஒலைகள்’ சிகரத்தைத் தொட்ட ஒருவன் ஏறிச்சென்ற பாதையின் படிக்கற்கள்.