Description
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின், அஷ்ரபின் மரணம் தொடர்பான நூலொன்றை சர்ஜூன் ஜமால்தீன், நீண்ட தேடலும் உழைப்பும் கொண்டு வெளியிட முன்வந்துள்ளார். அஷ்ரபின் சொந்தக் கட்சியினர், அவரை வாக்கு சேகரிப்பதற்கான குறியீடாகப் பயன்படுத்துவோர் மத்தியில், அஷ்ரப் இறக்கும் போது 09 அல்லது 10 வயது சிறுவனாக இருந்த சர்ஜூன். தனது அரசியல், சமூக வாசிப்பு வழியாக அஷ்ரப் அவர்களைக் கண்டடைந்து இந்த நூலை வெளியிட தன்னை அர்ப்பணித்து உழைத்திருப்பது மிக முக்கியமானது. மனம் கொள்ளத்தக்கது.
இந்த தேடல்மிகு நூலை பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி அவரை எழுதத் தூண்டியிருப்பது அவரது சமூகம் மீதான உண்மையான நேசம்தான் என்பது வெள்ளிடைமலை. இதன்மூலம் இவர் எந்த நலன்களையும் அடைந்துவிட முடியாது. மாறாக நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் மட்டுமே எதிர் கொள்ள முடியும்.
அஷ்ரப் அவர்களின் நாமத்தினை உச்சரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு, அதன் தலைமைகளுக்கு இல்லாத ஒரு துணிவு சர்ஜுனுக்கு இருக்கிறது என்பது இந்த பங்களிப்பின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இவரின் இந்த அர்ப்பணமிக்க உழைப்பு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள், அஷ்ரப் அவர்களின் வழி நிற்பவர்கள் என்பவர்கள் தமது தார்மீகக்கடமையில் இருந்து தவறி வந்திருக்கின்றனர் என்பதை வரலாற்றில் அழுத்தி பதிய வைக்கும்.
-எம்.பௌசர். இலண்டன்





Reviews
There are no reviews yet.