Description

அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றால் விளைந்த தொழில்புரட்சி, அதன் மூலம் பெரு பொருளாதார வளர்ச்சி, அதன்பின் அந்த வீச்சை அதிகரித்த தகவல் தொழில்நுட்பம், இன்டர்நெட். அதெல்லாம் போதாது என்று இப்போது, ‘இது உதவியா ஆபத்தா?’ என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிற, செயற்கை நுண்ணறிவு என்கிற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். AI. சாதாரண சம்பளங்கள் போதாது. அடிக்கடி மேம்பாடு காணும் சில பத்தாயிரம் ரூபாய்களுக்கான விலையில் ஆண்ட்ராய்டு போன்கள்: லூனா மொப்பெட் எல்லாம் போய் சில  லட்சங்களில் மோட்டார் சைக்கிள் விலைகள்.  வாஷிங் மெஷின், ஏசி போன்றவை தாண்டி, சில கோடி ரூபாய்களுக்கு கார்கள்.  முழு இடமும் கிடையாது. வீடு அல்ல. வெறும் பிளாட் என்பதே பல கோடி ரூபாய்கள். ஆக, பணம் இல்லாமல் முடியாது. செலவு செய்ய மட்டுமல்ல. சம்பாதிக்கவும் 100 வழிகள். கடின உழைப்பு அல்ல. திறமையான அணுகுமுறை இருந்தால் போதும்.  பணம் கொட்டும். ‘மண்ணுல போடு அல்லது. பொன்னுல போடு’ என்கிற காலம் இல்லை. முதலீட்டிலும் பாண்டுகள், பரசுர நதிகள், கோல்ட் பீஸ், கிரிப்டோ என பல புது வகைகள். இப்படிப்பட்ட தினம் தினம் மாறிக்கொண்டிருக்கிற பணம் இல்லாதவர்களுக்கு இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிற உலகத்தில் வாழ, பணத்தை உண்டாக்க பாதுகாக்க முதல் முக்கிய தேவை பணம் குறித்த புரிதல். அந்த முக்கியமான தேவையைக் கடந்த மூன்று தசமங்களாக தமிழ் மக்களுக்கு எளிமையான வழிகளில் பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் புத்தகங்கள் வழியாகவும் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோம வள்ளியப்பன். தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்பதுக்கும் மேற்பட்ட  புத்தகங்கள் எழுதிய சோம வள்ளியப்பன் எழுதிய,  புதிய புத்தகம், ‘உலகம்-நாடு-வீடு-பணம்’.

Author: சோம. வள்ளியப்பன்
Publisher: எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)

Reviews

There are no reviews yet.

Be the first to review “உலகம் நாடு வீடு பணம்”

Your email address will not be published. Required fields are marked *