Description
முனைவர். கி. பார்த்திபராஜா
தமிழ்ப் பேராசிரியர், நாடகவியலாளர், கலை, இலக்கியம், அரசியல் எனப் பல தளங்களில் 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தான் பணிபுரியும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் “மாற்று நாடக இயக்கம்” என்னும் அமைப்பைத் தோற்றுவித்து நாடகப் பணிகளைச் செய்து வருகிறார். காயாத கானகத்தே… நெடும்பயணம், சாமீ… தவத்திரு தூ.தா சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு முதலானவை இவரது குறிப்பிடத்தக்க அரங்கத்துறை சார்ந்த நூல்கள்.
பேராசிரியர் சி.மௌனகுருவை முன் வைத்து “ஈழத்தின் அரங்க அரசியலை”ப் பேசும் சிறு முயற்சியே இந்நூல், அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தின் அரங்க அசைவியக்கமாகத் திகழும் மௌனகுரு அவர்களின் கூத்து, நாடகம், கலை இலக்கிய நோக்கு யாவற்றினும் ஊடாகக் குறுக்கும் நெடுக்குமாகப் பயணப்பட்ட தமிழ் நாட்டு இளைய நாடகக்காரனின் குறிப்புகள் இவை .





Reviews
There are no reviews yet.