Description

இலங்கை தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பங்கு மிகப்பெரியது!இதன் வரலாறு இதுவரை சரியாக சொல்லப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்! குறிப்பாக பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றிய விபரங்களும், அந்த ஒப்பந்தம் எப்படி உருவானது என்ற வரலாறும் இது வரை பொதுவெளிக்கு வரவில்லை.

இந்த ஒப்பந்தத்தை புலிகள் கடுமையாக எதிர்த்து இந்த ஒப்பந்தத்திற்கு சார்பானவர்களை எல்லாம் தேடி தேடி கொன்றொழித்து கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக இவ்வொப்பந்தம் பற்றி பேசவே மக்கள் பயந்தார்கள் இதற்கு ஆதரவாக பேசினால் புலிகளின் கடும் கோபத்திற்கு இரையாவோம் என்று கருதி பலர் இப்படி ஒரு ஒப்பந்தம் நடந்தாகவே காட்டிக்கொள்ளாமல் கடந்து போனார்கள்.

இப்படிபட்ட சூழ்நிலை அன்று நிலவியதால் இதன் விபரங்கள் போதியளவு பொதுவெளிக்கு இதுகாறும் வரவில்லை.இந்நூல் அந்த குறையை போக்குகிறது. இதில் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் திரு.அமிர்தலிங்கம் அவர்களின் பங்கு பற்றிய விபரங்களும் மிக தெளிவாக உள்ளது! இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகும்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *