Description
மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்! தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்த, மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சு, மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.
Reviews
There are no reviews yet.