Description
‘மறுபடியும் கணேஷ்’ சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும் கதை. கணேஷும் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்படும் முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்பாக இன்னொரு கதையும் இடம் பெற்றுள்ளது.
விஞ்ஞானக் கதைகளை மட்டுமல்ல, ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையையும் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தம்மால் எழுத முடியும் என்பதை திரு. சுஜாதா அவர்கள் நிரூபித்துக் காட்டும் கதையே அது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குமுன் ‘கல்பனா’ மாத இதழில் வெளிவந்தது இக்கதை.
தொழிலாளியின் குமுறல்கள், குடும்பத்தில் நிலவும் அவலங்கள், முதலாளி வர்க்கத்தினரின் ஆணவப்போக்கு, இதற்கிடையே தொழிலாளர்களுக்குப் பாடுபடுவதாகக் கூறும் யூனியன் அமைப்புகள், அவர்களுக்குள்ளே ஏற்படும் பிளவுகள்…. என்று அத்தனையையும் அக்குவேறு ஆணி வேறாக பிய்த்துக் காட்டியிருக்கிறார்.
ஒவ்வொரு சம்பவமும் மிக நுணுக்கமாகக் கையாளப் பட்டிருப்பது நமக்கு வியப்பூட்டுகிறது.
முற்றிலும் புதிய கோணத்தில் இந்நூலைப் படைத்துள்ள திரு. சுஜாதா அவர்களுக்கு எங்கள் நன்றி.
மற்றும் மாலைமதி, கல்பனா இதழ்களின் ஆசிரியர்களுக்கும் எங்கள் நன்றி.

Reviews
There are no reviews yet.