Description
“சத்திய சோதனை, என்ற அரிதான, அபூர்வமான சுயசரிதை மகாத்மா காந்தியின் முனத்தின் செயல்பாடுகளை வெளிக்காட்டும் ஒரு சாளாம், பலகணி அவரது இதய உணர்வுகளை வெளிப்பபடுத்தும் சாளரம் – சாதாரணமாக இருந்த மனிதரை இந்திய நாட்டின் தந்தை என்ற உயர்ந்த நிலைக்கு உன்னத நிலைக்கு எது உயர்த்தியது என்பதைப் புரிந்து கொள்வதற்கான தெளிவைக்காட்டும் பலகணி, காந்தி சிறுவராக இருந்த காலத்திலிருந்து தொடங்கி இந்தியாவில் சுதந்திர இயக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த காலம் வரையுள்ள அவரது வாழ்க்கையின் நிலைகளைக் காட்டுவது வரை அழைத்துச் சென்று அவரது பரிசோதனைகளையும் மனக்குமுறல்களையும் அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை உருவாக்கிய சூழ்நிலைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். குழந்தைத் திருமணம், இங்கிலாந்தில் கல்வி தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில், அங்கே அவரது சத்தியாகிரகம் உள்ளிட்டலை இவற்றுள் அடங்கும். அவருக்கு சுயசரிதை எழுதும் நோக்கம் இல்லை. ஆனால் இனவெறி வன்முறை, காவளித்துவம் ஆசியவற்றுக்கு எதிரான அவருடைய போராட்டத்தால் முழுமையான சத்தியத்தைத் தேடிய தன்னுடைய சத்திய சோதனை அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார். ‘இந்த உலகத்திற்கு நான் அறிவுறுத்த வேண்டியது எதுவுமில்லை. சத்தியமும் அகிம்சையும் மலைகளைப்போல பழமையானவை,”
Reviews
There are no reviews yet.