Description
“உனக்கு என்ன செய்யத் தெரியுமோ அதை செய்யாதே! எனக்கு என்ன தேவை என்று புரிந்து கொள்.” எனக்கு மற்றவர்கள் உதவ முன்வரும் போது அவர்களுக்கு இதை சொல்ல வேண்டும் என்று தோன்றும். உதவ எல்லோருமே தயாராக இருப்பார்கள். என்ன உதவி என உள்வாங்கி செய்வதில்தான் சிக்கல் இருக்கும்.
நோய் என்று வந்து விட்டால் வீரவசனம் பேசாது, ரோசம், மானம் ஆகியவற்றை கைவிட்டு, பிறரின் தயவை, உதவியை எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்கிறது. நம் சமுதாயத்தில் ஓரளவுக்கு நோயுற்ற முதியோரை பராமரிக்க பழகியுள்ளோம். என்றாலும் ஆண்கள் பராமரிக்கப்படுவது போல பெண்களுக்கு வாய்ப்பதில்லை. பெண் மற்றவர்களுக்கு பணிவிடை செய்பவளாக அறியப்படுகிறாள். அதனால் அவள் பணிவிடையைப் பெறுதல் என்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது.
– சாலை செல்வம்
Reviews
There are no reviews yet.