Description
பிரிவோம்… சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. ‘ஆனந்த தாண்டவம்’ என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.
Reviews
There are no reviews yet.