Description
பழமொழிகள் பெரும் பாலும் மக்கள் வழக்கில் வழங்கி வருகின்றன. அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தி வழங்கும் முயற்சிகள் பல இக்காலத்தே மேற்கொள்ளப் பெறுகின்றன. அக்காலத்துப் பெரும்புலவர்கள், இப்பழமொழிகளின் அடிப்படையிலே மக்களின் ஒழுக்கங்களை வகுத்துக் கூறும் பல செய்யுட்களைப் படைத்து, அவ்வொழுக்கங்களை நிலைப்படுத்தவும், அப்பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்றிருக்கின்றனர். இம்முயற்சியில், மிகவும் போற்றத்தக்கதாகத் திகழ்வது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறு என்னும் அமைப்பு ஆகும். ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியையும் விளக்கும் ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்களால் அமைந்துள்ளது பழமொழி நானூறு.
Reviews
There are no reviews yet.