Description
வளவனுக்கு ஓய்வு நேரத்தில், கதைப் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். ஒருநாள் அவன் ஓர் ஆங்கிலக் கதையை வாசித்தான். அந்தக் கதையில் ஒரு சிறுவனுக்குப் பல் விழுந்துவிடும். அவன் விழுந்த பல்லை எடுத்துத் தூங்கப் போவதற்கு முன்,தலையணைக்குக் கீழே வைப்பான்.
நடுஇரவில் ஒரு தேவதை வந்து, அதை எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு தங்கக்காசு வைக்கும். அவன் காலையில் எழுந்து ஆவலுடன் தலையணையைத் தூக்கிப் பார்ப்பான். அங்கே மின்னுகிற ஒரு தங்கக்காசு இருக்கும்.
Reviews
There are no reviews yet.