Description
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும், மறுபரிசீலனைக்கும் திராவிட கருத்தியல் உள்ளாகிவருகிறது. தமிழ்த் தேசியம், தலித் விடுதலை, இந்துத்துவ தேசியவாதம் என்ற சகல முனைகளிலிருந்தும் தாக்குதலை சம்பாதித்துள்ள நிலையில் திராவிட கருத்தியலின் வழக்கறிஞராக, அதன்மீது சொல்லப்படும் அவதூறுகளுக்குக் காரணமான நோய்களை ஆய்வுசெய்யும் மருத்துவராக வே.மு.பொதியவெற்பன் இந்நூலை எழுதியுள்ளார். கட்டுரைகளாக இருந்தாலும் சுவாரசியமான வடிவமாக இது இருக்கிறது. திராவிட இயக்கத்துக்கு எதிரான விமர்சனங்கள் மெதுவாக மதவாதம், மனுவாதத்தை நோக்கிச் செல்கின்றன என்பதையும் ஆராய்கிறார்.
Reviews
There are no reviews yet.