Description

சத்தியம் என்பது ஒரு பெரிய விருட்சம். அதற்கு நீர் ஊற்றி வளர்க்க, வளர்க்க அதிகப் பழங்களைத் தருகிறது. சத்தியமென்னும் சுரங்கத்தில் எவ்வளவு ஆழமாகத் தோண்டிச் சோதனைப் போடுகிறோமோ அவ்வளவுக்கு அதில் புதைந்துகிடக்கும் அரிய இரத்தினங்களைக் கண்டுபிடிப்போம்.

*வேண்டுமென்றோ, தன்னையறியாமலோ உண்மையை மறைத்தும். திரித்தும், மிகைப்படுத்தியும் கூறும் குணம் மனிதனுக்கு இயற்கையாக ஏற்பட்டுள்ள ஒரு பெருங்குறையாகும். அதினின்றும் தப்புவதற்கு மௌனப் பயிற்சி இன்றியமையாத சாதனம். வார்த்தைகளை எண்ணிப் பேசுவோன் யோசனையற்ற மொழிகளைக் கூறான்.

*பாம்பு என்னைக் கடிக்கும் என்று தெரிந்தால், அதனிடமிருந்து ஓட முயற்சி மட்டும் செய்வதில்லை. அதனிடமிருந்து ஓடியே தீர்வதென்று உறுதிசெய்து கொள்கிறேன். வெறும் முயற்சி மட்டுமெனில் நிச்சய மரணமாக முடியலாம் என நான் அறிவேன். வெறும் முயற்சி, பாம்பு கட்டாயம் கடித்தேவிடும் என்ற நிச்சயமான உண்மையை அறியாததற்கே அறிகுறியாகும். எனவே முயற்சி செய்து பார்ப்பதுடன் திருப்தி அடைவதென்றால் உறுதியான செயலின் அவசியத்தை இன்னும் நன்கு உணர்ந்துகொள்ளவில்லை என்ற பொருள்படும்.

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788196926946
Published on: 2024
Book Format: Paperback

 

Category: மொழிபெயர்ப்பு, தன்வரலாறு
Subject: காந்தி

Reviews

There are no reviews yet.

Be the first to review “சத்திய சோதனை (Pen Bird)”

Your email address will not be published. Required fields are marked *