Description

தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் இல்லை. பழிக்கும் நோக்கம் இல்லை. எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்து விட்டதே என்ற துக்கமும் கேவலும். அதேநேரம் உண்மையின் கூர்முனைகள் யாருக்கும் அஞ்சாமல் பல பிம்பம்களைக் கீறுகின்றன. நேர்மையின் சித்திரங்கள் பிரச்சாரத்தின் நெடுஞ்சுவர்களைக் கடந்து மனிதத்தை எல்லா திசைகளிலும் அடையாளம் காண்கின்றன. பிரபாகரனை நேரில் சந்திக்கக்கூடிய, அவரை இறுதிவரை சந்தித்து வந்தவர்களுடன் அந்தரங்கமாக உரையாடக்கூடிய உயர் நிலையில் இருந்தவர் தமிழினி. உயர் நிலைப் போராளிகள் அதிகமும் இறுதிப் போரில் கொல்லப்பட்டார்கள். அல்லது சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்கள். இந்த இரண்டு நெருப்பு வளையங்களிலும் தப்பிப் பிழைத்தவர் தமிழினி. அதுவும் அரசியல் அணியின் உயர் தலைவர் என்ற வகையில் அவரது அறிதலின், அனுபவத்தின் வீச்சு பரந்து விரிந்தது. இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்நூல். நினைவுகளில் நின்று கொல்லும் பல பகுதிகளைக் கொண்டது. தவிர்க்கவே முடியாத நினைவோடை பதிவு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு கூர்வாளின் நிழலில்”

Your email address will not be published. Required fields are marked *