Description
-என். சண்முகரத்தினம்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதனுடன் தொடர்புள்ள பல்வேறு அம்சங்கள் பற்றிய இந்தத் தொகுதியின் இரண்டு பகுதிகளும், மொத்தமாகப் பதினெட்டு ஆக்கங்களை உள்ளடக்குகின்றன. முதலாம் பகுதியில் உள்ள கட்டுரைகளில் தேசிய இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்புலமும் அரசியல் பொருளாதாரமும் கோட்பாட்டு ரீதியில் அணுகப்படுகின்றன.
இரண்டாவது பகுதியில் வரும் பதிவுகள் சிலவற்றில் தனிமனிதர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்தக் கட்டுரைகளும் தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புள்ளவையே.
எல்லாக் கட்டுரைகளும் ஒரு பொதுவான விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கொண்டுள்ளன.
இந்தத் தொகுப்பு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் நிலை பெறு மனித மேம்பாடு ஆகியவற்றை, மக்கள் ஜனநாயகத்திற்கான போராட்டத்துடன் இணைக்கும் சவால் பற்றிய திறந்த விவாதங்களுக்கு உதவும் …..





Reviews
There are no reviews yet.