Description
‘ஜான் ரீடு’ எழுதிய இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும் தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழுமனதுடன் இப்புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர வேண்டும், உலகின் எல்லா மொழிகளிலும் வரவேண்டுமென நான் விரும்பும் புத்தகம் இது.- லெனின்
பத்துலட்சக் கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர வேண்டும், எல்லா மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும் என நான் விரும்பும் புத்தகமாகும் இது. பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளை உள்ளபடி உயிர் களையுடன் இது விவரிக்கின்றது. இந்தப் பிரச்சினைகள் விரிவாய் விவாதிக்கப்படுகின்றன; ஆனால் எவரும் இந்தக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ முற்படுவதற்கு முன் தமது முடிவின் உட்பொருளைச் சரிவர புரிந்து கொள்வது அவசியமாகும். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் அடிப்படையான பிரச்சினையாகிய இதனைத் தெளிவுபடுத்த ஜான் ரீடின் புத்தகம் துணை புரியும் என்பதில் ஐயமில்லை.





Reviews
There are no reviews yet.