Description
-கீரனூர் ஜாகிர் ராஜா.
நாவலின் மையமான புள்ளியாக இருப்பது இத்தா’ என்கிற சடங்கு. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களும் தனித்திருத்தல் என்பதை அறிந்து கொண்டுவிட்டோம். ஆனால் இந்த இத்தா என்பது கணவனை இழந்த அல்லது கணவனால் தலாக் செய்யப்பட்ட அல்லது காணாமல்போன பெண்கள் தங்கள் தூய்மையை உலகுக்குக் காட்ட மூன்று மாதவிலக்குக் காலம் தனித்திருக்க வேண்டும். என்கிற சடங்கு. கணவனின் கணவன் உடல் முகத்தைக் கூடப் பார்க்காத கணவனின் கைவிரல் நகம் கூடத் தன் மீது படாத மரியம் ஏன் இத்தா என்னும் தனிமைச் சிறைக்குள் அடைபட வேண்டும் என்கிற கேள்வியை நாவல் அழுத்தமாக எழுப்புகிறது. இஸ்லாத்தில் மட்டுமல்ல. எல்லா மதங்களிலுமே இதுபோலப் பெண்ணுக்கு மட்டுமான சடங்குகள் இருக்கின்றன.
ச.தமிழ்ச்செல்வன்.





Reviews
There are no reviews yet.