Availability: In Stock

வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்

Category:

Description

ஒரு பிரதேசத்தின் பல்வேறு கூறுகளைக் கட்டமைப்பதில் அதன் இயற்கை அம்சங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அமைப்பினை மட்டுமன்றி, பொருளாதார, சமூக, கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் நிர்ணயிக்கவல்ல தீர்மானிகளாகச் செயற்படுகின்றன. அந்தவகையில், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் அப்பிரதேசத்தின் பல்வேறுவகைப்பட்ட அம்சங்களையும் தீர்மானிக்கும் காரணிகளாக உருவெடுத்துள்ளன. கடந்தகாலத்தில் கடுமையான உள்நாட்டுப் போருடன், தொடர்ச்சியான இயற்கை இடர்பாடுகளும் வடக்குப்பகுதியை ஆழமாகப் பாதித்துள்ளன. சமீபத்திய காலநிலை மாற்றத் தாக்கங்கள். வடக்கு மாகாணத்தில் புதிய சவால்களையும் அபாயங்களையும் உருவாக்கி வருகின்றன. இந்தச்சூழலில், இப்பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், அவற்றைத் தணிப்பதற்கும் இந்த ஆய்வுநூல் உதவக்கூடும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்”

Your email address will not be published. Required fields are marked *